Monday, December 18, 2017

நீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர்எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: கணக்கெடுக்கிறது ஆசிரியர்தேர்வு வாரியம்

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் ‘வந்தே மாதரம்’ தொடர்பான
கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் அதிகரித்தால் கூடுதலாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் கணக்கெடுத்து வருகிறது.

Tuesday, September 12, 2017

முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு பட்டியல் வெளியீடு

அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான, முதற்கட்ட தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Friday, July 14, 2017

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017

PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION – TNTET – PAPER – II
As per the notification No. 1/2017 published on 02.02.2017, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test-2017 for Paper-II on 30.04.2017 and provisional result was published on 30.06.2017 in the TRB website.

Thursday, July 13, 2017

பாலிடெக்னிக் ஆசிரியர் பணி தேர்வு நடக்குமா? : டி.ஆர்.பி., மவுனத்தால் பட்டதாரிகள் குழப்பம்

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவிக்கான அரசாணையை, 
சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த தேர்வு நடக்குமா என, பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Saturday, June 10, 2017

PGTRB நியமனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

முதுநிலை ஆசிரியருக்கான நியமனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க

வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்.

முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நியமனத்திற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை...

நியமனங்கள் கோர்ட் உத்தவுக்கு உட்பட்டது என்ற உத்தரவு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது

Thursday, June 1, 2017

டிஆர்பி


2017
ஆம் ஆண்டுக்கான
PAPER - II BT_Assist
தேர்வு பட்டியல்
டிஆர்பி
இணையத்தில்
வெளியீடு.
இணையத்தில்
வெளியீடு.
TRB.TN.NIC.IN

Monday, May 22, 2017

பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்

பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனத்தில் பாரபட்சம் காட்டுவதாக, தேர்வு வாரியத்துக்கு, மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Thursday, March 30, 2017

PGTRB : 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு மூலம் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

Friday, December 30, 2016

பேராசிரியர் தகுதித்தேர்வு பட்டியல்; வழக்கில் ’நோட்டீஸ்’

உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான, மாநில தகுதி தேர்வு பட்டியலை, வெளியிட தடை கோரிய வழக்கில், அரசுக்கு, ’நோட்டீஸ்’ அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Saturday, January 2, 2016

TRB NEWS | மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது

TRB NEWS | மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது

Tuesday, October 20, 2015

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுஅக்.,26ல் துவக்கம்


அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.-அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாற்றப்பட்டனர்.
அதற்குப்பின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.
இது தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு:
அக்.,26ல் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை- 2க்கு மாவட்டத்திற்குள் மாறுதல்; அக்.,27ல் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இணையதளம் மூலம் அக்.,30ல் நடக்கிறது. மனமொத்த மாறுதல் கோரும் தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு அக்.,௩௦ல் மாறுதல் வழங்க வேண்டும்.இதற்காக விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. புதிதாக விண்ணப்பம் அனுப்பினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Saturday, October 17, 2015

6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து பதவி உயர்வை புறக்கணித்த ஆசிரியர்கள்


விரைவில் கிடைக்கவுள்ள 6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து, முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்தனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 32 பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்கான முன்னிலைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ. சுபாஷினி முன்னிலையில், ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 3 பேர் மட்டுமே பணியிடங்களைத் தேர்வு செய்தனர்.
ஊதிய உயர்வுக்காக பதவி உயர்வை துறந்த ஆசிரியர்கள்: ஒரு பள்ளியில் 10 ஆண்டுகள் வரை பணி செய்யும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அளிக்கப்படுகிறது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பதவி உயர்வுக்கு முன்னிலை பெற்ற ஆசிரியர்கள் பலருக்கும், 6 மாதங்களில் தேர்வு நிலை அளிக்கப்பட உள்ளது.
தேர்வு நிலை கிடைக்கும்போது, ஊதியத்தில் 6 சதவீதம் உயர்வு கிடைக்கும். அதே நேரத்தில், பதவி உயர்வு கிடைத்தால் 3 சதவீதம் மட்டுமே ஊதியம் உயரும். இதனால், பெரும்பாலான ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கான தாற்காலிக உரிமைவிடல் அடிப்படையில் கலந்தாய்விலிருந்து வெளியேறியதாக, கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Wednesday, October 14, 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு:மதிப்பெண் தளர்வுடன் தேர்ச்சி பெற்ற 211 பேர் முடிவுகள் வெளியீடு

.
புதுச்சேரி தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்று தேர்ச்சி பெற்ற 211 பேரின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என கல்வித்துறை இயக்குநர் ல.குமார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த 26.5.15ஆம் ஆண்டில் 425 தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது.இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில்சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் கடந்த 10.7.15-ல் ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களை நிலுவையில் வைக்க உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.இதன் பின்னர் அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவின்படி தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேலும் பெற்ற 214 பேரின் முடிவுகள் கடந்த 25.9.15-ல் வெளியிடப்பட்டன.இதனிடையே கடந்த 9.10.15-ல் சென்னை உயர்நீதிமன்றம் தான் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீக்கியது.இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்று தேர்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 211 பேரின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.மேலும் 211 பேரின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 19.10.15, 20.10.15 தேதிகளில் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி நடைபெறும் என்றார் குமார்.

Monday, October 12, 2015

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு எப்போது?


முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 2015 ஆகஸ்ட் 12 முதல் 31 வரை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும் நடக்கவில்லை.
வெகுதுார மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்குள் பணி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு 2வது கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதில் இடம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு அளித்த பின், ஏற்படும் காலியிட அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவிக்கிறது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “10 ஆண்டு பணி நிறைவு முடித்த தகுதியான பட்டதாரி ஆசிரியருக்கு தேர்வு நிலை கிரேடு பதவிஉயர்வு வழங்கப்படும்.
இதற்கு பின் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கிடைத்தால் 6 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும். தேர்வுநிலை கிரேடு இன்றி சிலர் பதவி உயர்வை தவிர்த்துள்ளனர். இதனால் 2ம் கட்ட முதுநிலை பதவி உயர்வு பட்டியல் வெளியாகி உள்ளது.
தேர்வு நிலை கிரேடு ஆசிரியர்கள் பதவி உயர்வை ஏற்கும் போது, முதுநிலை காலியிடங்கள் ஓரளவிற்கு நிரம்பும். இதன் பின் நடக்கும் கலந்தாய்வில் அதிகமான பட்டதாரி ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் அதிக வாய்ப்பை பெற கலந்தாய்வு தள்ளி போகலாம்,” என்றார்.

Tuesday, September 29, 2015

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு


வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், வேளாண் தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களில், 2,200 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இடமாறுதல்இவர்களில், வேளாண் ஆசிரியர்கள், 14 ஆண்டுகளாகவும், கணினி ஆசிரியர்கள், எட்டு ஆண்டுகளாகவும், எந்தவித இடமாறுதலும் இல்லாமல், ஒரே இடத்திலே பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு, விருப்ப மாறுதலும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, பல போராட்டங்கள் நடந்தன. நமது நாளிதழிலும் செய்தி வெளியானது.
இந்நிலையில், வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, விருப்ப மாறுதல் வழங்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
நன்றிஇதுதொடர்பாக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாதவன் விடுத்துள்ள அறிக்கையில், 'இடமாறுதல் நடத்த உத்தரவிட்ட அரசு, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மற்றும், 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி' என, தெரிவித்துள்ளார்

Saturday, September 12, 2015

சிறப்புக் கல்வி ஆசிரியர்களுக்கான முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கற்றலில் குறைபாடுடைய மாணவர்களுக்கான "கேர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிகேவியரல் சயின்ஸ்' கல்வி மையத்தில் 2015-2016 கல்வியாண்டில் ஓர் ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ள இந்தமையத்தில் கற்பிக்கப்படும் இந்த முதுநிலை பட்டயப் படிப்பில் சேர, ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.படிப்பில் சேரும்போது மாணவருக்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
இந்தப் படிப்பை முடித்தவர்கள் அறிவுத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான கல்வி நிறுவனங்களில் சிறப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றலாம்; மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பையும் பெறலாம்.இந்தப் பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், "கேர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸஸ்', எண் 1, முதல் தளம், டாக்டர் திருமூர்த்தி நகர் 5-ஆவது தெரு, நுங்கம்பாக்கம், சென்னை- 600034' (தொ.பே. 044- 2821 2828) என்ற முகவரி,careibschennai@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, May 2, 2015

ஓவியம், தையல், இசை உள்பட சிறப்பாசிரியர் தேர்வுக்கு வினாத்தாள் தயாரிப்பு மும்முரம்: ஜூன் மாதம் தேர்வு நடத்த திட்டம்

சிறப்பாசிரியர் தேர்வுக்கு வினாத்தாள் தயாரிக்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களும், உடல்கல்வி ஆசிரியர்களும் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் முன்பு நியமிக்கப் பட்டு வந்தனர்.
இந்த நிலையில், தற்போது முதல்முறையாக போட்டித்தேர்வு மூலமாக அவர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். தேர்வுக்கான பாடத் திட்டம் சில மாதங்களுக்கு முன்பு அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்டது. தேர்வுக்கான பாடத்திட்டம் கடினமாக இருப் பதாக புகார் எழுந்தது.இந்த நிலையில், சிறப்பாசிரியர் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தேர்வில், கொள்குறிவகையில் 190 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு அரை மதிப்பெண்வீதம் எழுத்துத்தேர்வுக்கு 95 மதிப்பெண். நேர்முகத்தேர்வுக்கு 5 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது (மொத்தம் 100).விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சிறப்பாசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.எழுத்துத் தேர்வினை ஜூன் மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்ட மிட்டுள்ளது. எனவே, இதுகுறித்த அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தேர்வில், கொள்குறிவகையில் 190 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு அரைமதிப்பெண் வீதம் எழுத்துத்தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும் நேர்முகத்தேர்வுக்கு 5 மதிப்பெண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது

Sunday, April 5, 2015

சிறப்பாசிரியர் கோரிக்கை 'பணால்' போட்டி தேர்வை ரத்து செய்ய அரசு மறுப்பு


குழப்பமான பாடத்திட்டம் கொண்ட பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய முடியாது' என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், கலை, ஓவியம், தையல் மற்றும் இசைப் பிரிவு ஆசிரியர்கள், கவலை அடைந்துள்ளனர்.
பணி நிரந்தரம் தமிழக பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு சிறப்பாசிரியர்
களான ஓவியம், கலை, தையல் மற்றும் இசைப் பிரிவில் பணியாற்றுவோருக்கு, 10ம் வகுப்பை கல்வித் தகுதியாகக் கொண்டு போட்டித் தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.
இதற்கான பாடத்திட்டத்தை, தமிழக கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தயாரித்து, அரசின் ஒப்புதலுடன், கடந்த ஜனவரியில் வெளியிட்டது. பாடத்திட்டம் மிகவும் குழப்பமாக உள்ளதாகவும், அதிக கல்வித் தகுதியை கொண்டவர்களுக்கு கூட, கடினமாக உள்ளதாகவும், கலை ஆசிரியர்கள்
அரசுக்கு மனு அனுப்பினர். மேலும், பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்கத் தலைவர்
ராஜ்குமார், முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு மனு அனுப்பினார்.ரத்து செய்ய முடியாது இதை விசாரித்த அரசு, போட்டித் தேர்வு அரசின் கொள்கை முடிவு என்பதால், ரத்து செய்ய முடியாது; பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்படாது என, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இத்தகவலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு உள்ளது. அதனால், இத்தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவது என்று சிறப்பாசிரியர்கள் கவலை அடைந்து
உள்ளனர்.

முன்னுரிமைஅடிப்படையில் தேர்வு கணினி பயிற்றுநர்கள் 503 பேர் பணி நியமனம்

: செய்யப்பட்ட 133 பேரைத் தவிர மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில்503 கணினிபயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.உயர் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக, 133 பேருக்கான பணி நியமன ஆணை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கணினி பயிற்றுநர்கள் 652 பேர்பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்தக் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்குவதற்கான இணையதள கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்ற கலந்தாய்வில் கணினி பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.இதில் ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவ வீரர்கள், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான முன்னுரிமைப் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்க்க வேண்டும் என 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றுள்ளனர். இதன் காரணமாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 643 பேரில் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 133 பேருக்கு பணி நியமன ஆணை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இறுதி உத்தரவின் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் உறுதிசெய்யப்பட்ட தேர்வுப் பட்டியல் பெறப்பட்ட பின்னரே பணி நியமன ஆணை வழங்கப்படும்.முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 133 பேரைத் தவிர மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் 491 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் கிடைத்துள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கணினி ஆசிரியர் நியமனத்தில் குழப்பம்: இன்று கவுன்சிலிங் நடத்துவதில் சிக்கல்?

கணினி ஆசிரியர் நியமனத்தில், விதவை மற்றும் கலப்பு திருமணம் செய்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இறுதித் தேர்வை நிறுத்தி வைக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இன்று, கணினி ஆசிரியர் கவுன்சிலிங் நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள, 652 கணினி ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,போட்டித் தேர்வு நடத்தியது. இதில், ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த, 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு பெறவில்லை. அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, நீதிமன்றத்தில் பல வழக்குகளை தொடர்ந்தனர். இதனால்,புதிய ஆசிரியர் நியமனப் பணி, பல மாதமாக இழுத்தடிக்கப்பட்டது. நீதிமன்ற வழக்குகளைத் தாண்டி, 652 ஆசிரியர்களின் தேர்வு பட்டியலை டி.ஆர்.பி., கடந்த, 20ம் தேதி வெளியிட்டது. ஏப்., 4ம் தேதி (இன்று), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் கவுன்சிலிங் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கும் புதிய சிக்கல் எழுந்து உள்ளது.
கணினி ஆசிரியர் நியமனத்தில் விதவைகள் மற்றும் கலப்பு மணம் புரிந்தோருக்கான முன்னுரிமை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என, டான் பாஸ்கோ, கீதா, திரிவேணி மற்றும் சோனியா ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை, நீதிபதி சசிதரன் விசாரித்து உத்தரவிட்டுள்ளார். அதில், 'மனுதாரர்களுக்கு, நான்கு இடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். வரும், 6ம் தேதி, இதுகுறித்து டி.ஆர்.பி., பதிலளிக்கும் வரை, இறுதித் தேர்வை இடைக்காலமாக நிறுத்தி வைக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவால், இன்று, கவுன்சிலிங் நடக்குமா என்று, தேர்வானோர் குழப்பமடைந்து உள்ளனர்.